தேமுதிக விலகல்- சுதீஷ் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமாரின் கண்டனம்

36

தேமுதிக சார்பில் அதிமுக கட்சியுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது அக்கட்சி. அக்கட்சியின் முக்கிய தலைவரான சுதீஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காத காரணத்தால் அக்கட்சி கூட்டணியில் இருந்து விலகி விடுவதாக சுதீஷ் அறிவித்துள்ளார்.

மேலும் அதிமுக கட்சியை கடுமையாக சுதீஷ் விமர்சித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரனும் கடுமையாக அதிமுகவை எதிர்த்து பேசியுள்ளார்.

எடப்பாடியில் முதல்வர் ஜெயிக்க முடியாது அனைத்து தொகுதியிலும் அதிமுக மண்ணை கவ்வும் என்ற வகையில் தேமுதிக தலைவர்கள் பேசி வருவது அமைச்சர் ஜெயக்குமாருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிடிக்கவில்லை என்றால் கை கொடுத்து விலகி விட வேண்டும் அதை விட்டு இப்படி பேசக்கூடாது, அதிமுக தோற்கும் என கூறும் சுதீஷ் என்ன ஜோசியரா தேமுதிக வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் இல்லை என்றால் அதிமுக பதிலடி கொடுக்கும் என கூறியுள்ளார் ஜெயக்குமார்.

பாருங்க:  அஜித்தை மீண்டும் பார்க்க முடியுமா தெரியவில்லை - அபிராமி ஏக்கம்
Previous articleஇளையராஜா வடிவேலு இணைந்து நடிக்க வேண்டிய படமாம் அரிய செய்தி
Next articleபிஜேபி அமைச்சரை சந்தித்து பேசிய அர்ஜூன்