திவ்யதர்ஷினிக்கு பிறந்த நாள் குவியும் வாழ்த்து

64

விஜய் டிவியில் வந்த காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. திவ்யதர்ஷினியை சுருக்கமாக டிடி என்று அனைவரும் செல்லமாக அழைப்பர்.

காபி வித் டிடியில் பல பிரபலங்களை பேட்டி எடுத்துள்ள டிடி ஜாலியாக எதையும் செய்வார். அதனால் விஜய் டிவி மற்றும் ரசிகர்களுக்கு இவர் செல்லப்பிள்ளை ஆவார்.

சன் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியும் தாவணிக்கனவுகள் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரியதர்ஷினியின் தங்கையே திவ்யதர்ஷினி ஆவார்.

திருமணம் முடிந்த உடன் விஜய் டிவியை விட்டு விலகி இருந்த இவர் . மணவாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் திரும்பவும் ஏதாவது ஒரு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுதான் வருகிறார்.

இவரின் பிறந்த நாள் இன்று . இவரை பல சினிமா உலக பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர் . நாமும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

பாருங்க:  இந்தியன் 2 மேக்கப் டெஸ்ட் - அமெரிக்கா செல்லும் ஷங்கர்
Previous articleரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
Next articleவலிமை அப்டேட்டை இங்கிலாந்து கிரிக்கெட் வீரரிடம் கேட்ட அஜீத் ரசிகர்கள்