கடந்த 2019 நவம்பரில் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் ஒருவரை சிலர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றனர். டோல்கேட் அருகே டூவீலரை நிறுத்தி விட்டு தனது கிளினிக்குக்கு சென்று திரும்பிய இவரை இவர் வண்டியில் காற்றை முழுவதும் வெளியிட்டு டயரை பஞ்சர் ஆக்கி வைத்துள்ளனர்.
வண்டியை எடுத்த கால்நடை மருத்துவரும் இந்த வேலையை திட்டமிட்டு செய்த அந்த கற்பழிப்பு கும்பலிடமே உதவி கேட்க, பஞ்சர் பார்க்க அழைத்து செல்வதாக கூறி அந்த பெண் மருத்துவரை கற்பழித்து உடலை எரித்தும் விட்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் இரண்டு நாளில் கைது செய்யப்பட்டு போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த கதையை மையமாக வைத்து திசா என்கவுண்ட்டர் என்ற பெயரில் ராம்கோபால் வர்மா படம் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகியுள்ளது.