இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் குறித்து வதந்தி வேண்டாம்

35

இயற்கை, பேராண்மை, உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ்.பி ஜனநாதன் முன்னணி இயக்குனரான இவர் லாபம் என்ற படத்தை விஜய் சேதுபதியை வைத்து இயக்கி வருகிறார். நேற்று மதியம் இப்படத்தின் எடிட்டிங் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர் வீட்டிற்கு சாப்பிட சென்றார். நீண்ட நேரமாகியும் வராததால் அவரின் உதவியாளர்கள் சென்று பார்த்தபோது அவர் மயங்கி கிடந்தார்.

இந்நிலையில் அவர் அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவர் இறந்து விட்டதாக தவறான தகவல் பரப்பபட்டு வருவதால் லாபம் படத்தை தயாரித்த நிறுவனம், ஜனநாதனின் உதவி இயக்குனர் பாலாஜி உள்ளிட்டோர் கவலை அடைந்துள்ளனர்.

அவர் காலமாகிவிட்டார் என்று தவறான தகவலைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அது வருத்தமாக உள்ளது. மருத்துவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். அடுத்தகட்ட சிகிச்சைக்குச் செல்வோம்.

அதை நம்பிக்கையுடன் தொடங்குவோம் எனச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அறுவை சிகிச்சை செய்யவுள்ளார்கள். அதற்குப் பிறகு தான் எதுவாக இருந்தாலும் சொல்வார்கள். தயவு செய்து தவறான செய்திகளைப் பரப்பாதீர்கள்” என்று  பாலாஜி தெரிவித்துள்ளார்.

பாருங்க:  அதிக விலை கொண்ட பிரியாணி
Previous articleஅந்தாதூன் ரீமேக்கில் சிம்ரன்
Next articleகமல் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு