Published
4 weeks agoon
தமிழ் சினிமாவில் ஜென் டில் மேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் ஷங்கர். தொடர்ந்து பிரமாண்டமான படங்களை கொடுத்து பிரமாண்ட இயக்குனர் பட்டியலில் ஷங்கர் முதலிடம் பிடித்தார்.
ஷங்கருக்கு இரண்டு மகள்கள் இதில் இளையமகள் அதிதி கார்த்தியுடன் விருமன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனுக்கும் திருமணம் நடந்தது அந்த நேரத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தால் பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சி எல்லாம் நடத்தவில்லை.
வரவேற்பு நிகழ்ச்சியை வரும் மே 1ம் தேதி திட்டமிட்டு இருந்தனர். இப்போது அந்த வரவேற்பு நிகழ்ச்சியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம் . மற்றொரு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.