இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட்

18

கடந்த 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படம். ஆருர் தமிழ்நாடன் எழுதிய ஜூகிபா என்ற கதையை எந்திரனாக ஷங்கர் இயக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

1996ம் ஆண்டு இனிய உதயம் என்ற பத்திரிக்கையில் தன் கதை வந்துள்ளதாகவும் அதை திருடி ஷங்கர் படமாக்கி விட்டார் என்ற குற்றச்சாட்டுக்களை ஆரூர் தமிழ்நாடன் வைத்துள்ளார்.

தனக்கு நஷ்ட ஈடு வழங்க கோரி எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆரூர் நாடன் வழக்கு தொடர்ந்தார்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இவ்வழக்கில் வாய்தாவாக வாங்கி இழுத்தடித்து வருகிறார் இயக்குனர் ஷங்கர் இதனால் கோபமடைந்த நீதிமன்றம் இயக்குனர் ஷங்கரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

பாருங்க:  ஜெய்ப்பூரில் எடுக்கப்படும் காஸ்ட்லி போட்டோ ஷூட்