sura
sura

சுறாவின் தோல்விக்கு யார் காரணம்! 10 ஆண்டுகளுக்கு பின்னர் மனம்திறந்த இயக்குனர்!

விஜய்யின் 50 ஆவது படமான சுறா ரிலீஸாகி இன்றோடு 10 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் அந்த படத்தின் இயக்குனர் படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார்.

விஜய்யின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது சுறா. அவரின் 50 ஆவது படமான அது மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் விஜய் ரசிகர்களுக்கே அந்த படம் பிடிக்காமல் போனதுதான் மிகப்பெரிய துயரம். அதன் பின்னரும் சமூகவலைதளங்களில் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்ட படங்களில் ஒன்றாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது படத்தின் தோல்வி குறித்து இயக்குனர் எஸ் பி ராஜ்குமார் ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள நேர்காணலில் ‘அந்த படத்தை விஜய் மிகவும் ரசித்து நடித்தார். பலரும் படம் நன்றாக இருப்பதாக பாராட்டினார்கள். ஆனால் அந்த நேரத்தில் விஜய்க்கு எதிராக ஒரு அணி வேலை செய்தது. அவர்களால் படத்தைப் பற்றி பலரும் கேலி பேச ஆரம்பித்தனர். அந்த படத்துக்கு பிறகு அஜித்துக்கு கதை பண்ணலாம் என நினைத்தேன். ஆனால் எதிர்பாராத தோல்வியால் எல்லாமே மாறிவிட்டது’ என கூறியுள்ளார்.