இயக்குனர் ஆர்.கே செல்வமணி தற்போது சினிமா தொழிலாளர் யூனியனான பெப்ஸியின் தலைவராக உள்ளார்.இவர் இன்று அளித்த பேட்டியில்,
கொரோனா சூழலில் மே 31 வரை திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் நடக்காது என தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகர், நடிகைகள் அனைவரும் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என இயக்குனரும் பெப்ஸி தலைவருமான ஆர்.கே செல்வமணி கூறியுள்ளார்.

