பேய்த்தனமாக வருகிறார் இயக்குனர் ராம்பாலா

பேய்த்தனமாக வருகிறார் இயக்குனர் ராம்பாலா

2000ங்களின் ஆரம்பத்தில் விஜய் டிவியில் வந்த நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சியில் பல படங்களை கேலி செய்து உல்டாவாக வந்தது. இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் நடிகர் சந்தானத்துக்கு நகைச்சுவை நடிகர் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது சந்தானம் நகைச்சுவை படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.தயாரித்தும் வருகிறார் இவர் தனக்கு மீடியாவில் வாய்ப்பு கொடுத்து லொள்ளு சபாவில் நடிக்க செய்த அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் ராம்பாலாவுக்கு தனது தில்லுக்கு துட்டு படத்தில் இயக்க வாய்ப்பு கொடுத்தார்.

மேலும் சில படங்களை இயக்கிய இயக்குனர் ராம்பாலா தற்போது பேய்த்தனமாக ஒரு அறிவிப்பை வெளியிட இருக்கிறாராம். படம் பற்றிய அறிவிப்புதான் அது. ஆனால் யாரை வைத்து படம் இயக்க போகிறார் என தெரியவில்லை அதிகபட்சம் சந்தானம்தான் ஹீரோவாக நடிப்பார் என தெரிகிறது.

இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது