Entertainment
தமிழர்கள் எங்கும் இல்லை- இயக்குனர் பேரரசுவின் வேதனை
மக்கள் அன்றாடம் செல்லும் இடங்களான உணவகம், துணிக்கடை, விமான நிலையம், ரயில்வே நிலையம் போன்ற இடங்களில் பெரும்பாலும் தமிழர்கள் பணியில் இல்லை என்பது வேதனையான விஷயம் என பேரரசு அறிக்கை விடுத்துள்ளார்.
விமான நிலையம் எல்லா மொழியினருக்கும் பொதுவானது தான். ஆனால், இங்கே தமிழர்கள் இருக்க வேண்டாமா? அதிகமாக தமிழர்கள் செல்லும் நுழைவு வாயிலில் தமிழ் தெரிந்த ஒருவர் இருக்க வேண்டாமா?
வட இந்தியரும் இருக்கட்டும் கூடவே ஒரு தமிழரும் இருக்க வேண்டாமா? தமிழகத்தில் எத்தனை தமிழர்கள் அந்த இடத்தில் திணறுகிறார்கள் பயப்படுகிறார்கள். அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்று புரியாமல் தவிக்கிறார்கள்.
விமான நிலையத்தில் மட்டுமல்ல பல பொது இடங்களிலும் இன்று தமிழகத்தில் இந்த நிலைமைதான். இந்தி திணிப்பு வேண்டாம்! என்று சொல்லிவிட்டு தமிழகத்தில் இந்திக்காரர்களை திணித்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் தமிழில் பேச முடியாத நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
குறைந்த சமபளத்திற்கு வட இந்தியர்கள் வேலைக்கு வருகிறார்கள் என்பதற்காக் நாம் நம் தமிழகத்தை அவர்களுக்கு அடகு வைத்து விடக் கூடாது என இயக்குனர் பேரரசு கூறியுள்ளார்.
