அவனுக்கெல்லாம் ஒரு லட்சம் ஓட்டா? -யாரை சொல்கிறார் மூடர் கூடம் நவீன்?

280

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களின் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் மூடர் கூடம் நவீன் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஒரு டிவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் ஆட்சியில் அமர 272 இடங்கள் வேண்டும் என்கிற நிலையில் 343 தொகுதியில் பாஜக முன்னணியில் இருப்பதன் மூலம் மீண்டும் அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

அதேசமயம், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிட்ட 5 பாஜக வேட்பாளர்களும் அனைவரும் மண்ணை கவ்வியுள்ளனர். இதில் ஹெச்.ராஜாவும் அடக்கம். சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ஹெச்.ராஜா 1.50 லட்சம் வாக்குகள் மட்டும் பெற்று 2ம் இடத்தில் இருக்கிறார். அந்த தொகுதியில் அவர் தோற்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், மூடர் கூடம் நவீன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘அடப்பாவிகளா. அவனுக்கெல்லாம் ஒரு லட்சம் ஓட்டு போட்டிருக்கிங்களே. நோட்டாவுக்கு கீழ ஓட்டு வாங்கும்போதே அவென் அவ்ளோ பேசுவானே. இனி சும்மாவா இருப்பான்’ என டிவிட் போட்டுள்ளார்.

ஹெச்.ராஜாவைத்தான் நவீன் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

பாருங்க:  வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் - சத்யபிரத சாகு அறிவிப்பு