Entertainment
பிரபல நடிகர் இயக்குனர் காலமானார்
இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரிடம் உதவியாளராக பணியாற்றிவர் ஆர்.என்.ஆர் மனோகர். இவர் சரத்குமார் நடிப்பில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய பேண்டு மாஸ்டர் படத்தில் அவரிடம் உதவியாளராக இருந்து பல்வேறு படங்களை இயக்கி நடிக்கவும் செய்துள்ளார்.
விவேக்குடன் தென்னவன் படத்தில் காமெடி செய்திருந்தார். சில படங்களில் வில்லனாகவும் நடித்திருந்தார். மாசிலாமணி, வேலூர் மாவட்டம் படங்களை இயக்கவும் செய்திருந்தார்.
நானும் ரவுடிதான்’, ‘வேதாளம்’, ‘மிருதன்’, ‘கைதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று (நவ.17) ஆர்.என்.ஆர்.மனோகர் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
