Entertainment
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை கொண்டாடிய இயக்குனர்கள்
மாநகரம் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . முதல் படத்திலேயே முத்திரை பதித்தாலும் பெரிய அளவில் இவர் மக்களிடையே அறிமுகம் ஆகவில்லை இருப்பினும் அடுத்தடுத்து வந்த கைதி, மாஸ்டர் படங்கள் இவரை பெரிய அளவில் உயர்த்தின. அதுவும் மாஸ்டர் படத்துக்கு பிறகு உச்ச நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்குகிறார்.
இப்படி புகழ்பெற்ற லோகேஷ்க்கு நேற்று பிறந்த நாள் ஆகும். பிறந்த நாளையொட்டி இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், கெளதம் மேனன், உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கேக் ஊட்டினர்.
