ரகசிய அறையிலிருந்து வெளியேறிய சேரன்.. அதிர்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள்.. வீடியோ பாருங்க

182
Biggboss promo

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட இயக்குனர் சேரன், கமல்ஹாசன் கொடுத்த ரகசிய அறை ஆப்ஷனை பயன்படுத்திக் கொண்டு தற்போது அதிலேயே இருந்து வந்தார்.

அங்கிருந்து மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? என்பதை கேட்டு வந்தார். லாஸ்லியாவிடம் காதல் குறித்து கவின் வற்புறுத்தி கேட்டதற்கு கடிதம் அனுப்பிய சேரன் ‘ நான் அவ்வளவு கூறியும் மீண்டும் லாஸ்லியாவிடம் இப்படி பேசலாமா?’ என கேள்வி எழுப்பி கவின் – லாஸ்லியா இருவரையும் தலை குனிய வைத்தார்.

இந்நிலையில், தற்போது ரகசிய அறையிலிருந்து வெளியேறி அவர் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார். அவரைக்கண்டு இன்ப அதிர்ச்சியடைந்த போட்டியாளர்கள் அவரை தூக்கி கொண்டாடும் புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பாருங்க:  மசாஜ் சென்டரில் பட்டாக்கத்தி காட்டி மிரட்டி கொள்ளை - சென்னைக்கு அருகே பரபரப்பு