காதல் கோட்டை, காதல் கவிதை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் அகத்தியன் .இவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது.
தனது முகநூல் பக்கத்தை போலவே போலியாக ஒரு நபர் முகநூல் பக்கத்தை வடிவமைத்து அகத்தியன் பெயரிலேயே கணக்கு ஆரம்பித்து அவரின் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கு நட்பு அழைப்பு அனுப்பி அவர்களிடம் எல்லாம் இன்பாக்ஸில் பணம் கேட்டு ஏமாற்றும் வேலையை செய்து வருகிறாராம்.
அதனால் இது போல யாரும் ஏமாற வேண்டாம் இது போல நபர்களிடம் உஷாராக இருக்க வேண்டுமாய் தனது முகநூல் நண்பர்களிடம் இயக்குனர் அகத்தியன் கேட்டுக்கொண்டுள்ளார்.