Connect with us

பெரம்பலூரில் டைனோசர் முட்டை

Latest News

பெரம்பலூரில் டைனோசர் முட்டை

பெரம்பலூர் பகுதியில் டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே பக்கத்து மாவட்டமான அரியலூரில் டைனோசர் முட்டைகள் சில வருடங்கள் முன்பு எடுக்கப்பட்டது அரியலூர் பகுதிகளில்தான் அந்தக்காலத்தில் டைனோசர் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்போது பெரம்பலூர் பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு பள்ளிக்கு அருகேயுள்ள ஏரியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.

ஏரியில் மண் எடுக்க தோண்டிய போது, உள்ளே புதைந்திருந்த டைனோசர் முட்டை மற்றும் கடல்வாழ் உயிரின படிமங்கள் வெளிப்பட்டது.

பல்வேறு அளவுகளில் டைனோசர் முட்டைகளை போன்ற உருவங்களில் ஏராளமாக முட்டைகள் கிடைத்துள்ளன.

இவைகள் டைனோசர் முட்டைகளின் படிமங்கள் என்றும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நத்தை, ஆமை, கல்மரத்துண்டுகள், நட்சத்திர மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பான மீம்ஸ்களும் வலைதளங்களில் உலாவருகின்றன. சார் 50 ரூபாய்தான் டைனோசர் குட்டி வாங்கிக்குங்க போன்ற மீம்ஸ்கள் ரசிக்க வைக்கின்றன.

More in Latest News

To Top