சிஎஸ்கே அணியில் விளையாட இப்போதும் ஆர்வமாக இருக்கிறேன்! தினேஷ் கார்த்திக் விருப்பம்!

சிஎஸ்கே அணியில் விளையாட இப்போதும் ஆர்வமாக இருக்கிறேன்! தினேஷ் கார்த்திக் விருப்பம்!

ஐபிஎல் தொடரில் தனது சொந்த மாநில அணியான சி எஸ் கேவுக்கு விளையாட தினேஷ் கார்த்திக் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் விளையாட எல்லாத் தகுதிகளும் இருந்தும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார் தினேஷ் கார்த்திக். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தனது சொந்த மாநில அணியான சிஎஸ்கே அணிக்கு விளையாட முடியாதது குறித்து வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில் ‘2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தேர்வின் போது சி எஸ் கே அணியில் என்னைக் கண்டிப்பாக தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தேன். எனக்கிருந்த சந்தேகம் நான் கேப்டனா? இல்லையா என்பதுதான். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக தோனியை தேர்வு செய்தார்கள். அது எனது நெஞ்சில் ஈட்டியால் குத்தியது போல இருந்தது. ஆனால் இப்போதும் தோனி தலைமையில் சி எஸ் கே அணியில் விளையாட தயாராக இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.