நிறையே பேர் படித்திருப்பதால் வேலை கிடைக்கவில்லை – அமைச்சரின் சர்ச்சை பேச்சு

222

வேலையில்லா திண்டாட்டம் குறித்து அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ள கருத்து கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

திண்டுக்கல் அருகே மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:

முன்பெல்லாம் 10ம் வகுப்பு படித்தாலே பெரிய படிப்பு என்று கூறுவார்கள். தற்போது எல்லோரும் அதிகம் படித்து விடுகின்றனர். அதிலும், பொறியியல் படிப்பில் மிகவும் அதிகம் பேர் படிக்கிறார்கள். அதனால்தான் வேலை கிடைக்கவில்லை. எங்கு பார்த்தாலும் இன்ஜினியர் இருக்கிறார்கள். படித்தவுடன் வேலை வேண்டும் எனில் டி.என்.பி.எஸ்.சி தேர்வை எழுத தயாராக இருக்க வேண்டும். அதில் வெற்றி பெற்றால் யார் தயவும் இன்றி அரசு வேலை உங்கள் இல்லம் தேடி வரும்’ என அவர் தெரிவித்தார்.

பாருங்க:  சுபஸ்ரீ பற்றி விஜய் பேசியதை கட் செய்த சன் டிவி - பின்னணி என்ன?