cinema news
திண்டுக்கல் சிறுமியை பாலியல் கொலை செய்த கொலையாளி விடுதலை- அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் மநீம கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ளது குரும்பட்டி கிராமம் இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் வெங்கடாசலம் என்ற முடி திருத்தும் தொழிலாளி. இவரது மகளான 12 வயது சிறுமி கடந்த வருடம் வீட்டில் தனியாக இருந்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு 19 வயது நபரால் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இது வெளியில் தெரியாமல் இருக்க அந்த பெண்ணுக்கு கரண்ட் ஷாக் கொடுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
விசாரணையில் குற்றவாளி கைது செய்யப்பட்டு ஒரு வருடம் ஆன நிலையில் மகிளா கோர்ட் குற்றம்சாட்டப்பட்டவர் மீது போதிய ஆதாரம் இல்லை என்று சொல்லி அந்த நபரை விடுவித்தது.
இந்த நிலையில் பொங்கி எழுந்த முடி திருத்தும் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இந்த வழக்கு விசயமாக தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் போலீஸ் சரியான முறையில் விசாரிக்கவில்லை ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை உரிய நீதியை பெற்றுத்தர வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதி திராவிடர் பிரிவு சார்பில் வற்புறுத்தப்பட்டுள்ளது.