திண்டுக்கல் லியோனிக்கு இப்படி ஒரு பதவியா

22

கடந்த 95, 96களில் வந்த பழைய பாடலா புதிய பாடலா, பட்டுக்கோட்டையா கண்ணதாசனா போன்ற பட்டிமன்ற கேசட்டுகள் மூலம் புகழ்பெற்றவர் திண்டுக்கல் ஐ லியோனி. பள்ளிக்கூட ஆசிரியராகவும் அந்த நேரத்தில் இவர் பணி செய்து வந்தார்.

பின்பு பல பட்டிமன்றங்களில் தென்மாவட்டங்களுக்கேயுரிய மதுரை பேச்சில் நக்கலாக பேசி மிகப்பெரும் பெயர் பெற்றார் இவர்.

திமுகவில் சேர்ந்த இவர் கலைஞர் காலத்திலிருந்தே திமுகவினர் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவராக இருந்தார். திமுகவை ஆதரித்து நகைச்சுவை ததும்ப வித்தியாசமாக தேர்தல் பிரச்சாரமும் செய்து வந்தார்.

இந்த நிலையில் இவர் திமுகவில் ஆற்றிய பணிக்காக தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் கழகத்தின் புதிய தலைவராக இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாருங்க:  முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரங்கலம் மனைவி படுகொலை
Previous articleமேக்கப் மேன் மீது மகேஷ்பாபுவுக்கு இவ்வளவு பாசமா
Next articleகாமெடி நடிகராக அறிமுகமாகும் ப்ராங்ஸ்டர் ராகுல்