தினமலர் ஆசிரியருக்கு சிறை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தினமலர் ஆசிரியருக்கு சிறை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கடந்த 2005ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றிற்காக தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

கிருஷ்ணகிரியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் முத்தமிழ் செல்வன். கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு மதுபானங்கள் கடத்தி வருவது தொடர்பாக லஞ்சம் பெற்றார். அந்த லஞ்சப்பணத்தில் சொத்துக்களும் வாங்கினார் என தினமலர் செய்தி வெளியிட்டது.

இதை எதிர்த்து முத்தமிழ் செல்வன் கிரிஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 15 வருடங்களாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதில், யூகங்களின் அடிப்படையில் வெளியான செய்தியில் காவல் அதிகாரியின் பெயரை சேர்த்தது தவறு என தீர்ப்பளித்து தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி மற்றும் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருக்கும் தலா 2 வருடம் சிறை தண்டனையை நீதிபதி வழங்கினார். மேலும், இருவரும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தார். அபாரதத்தை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் நீதிபதில் தீர்ப்பில் கூறியுள்ளார்.