டிஜிட்டல் முறை பட்ஜெட்- அல்வா கிண்டும் நிகழ்ச்சி தொடங்கியது

19

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு பட்ஜெட் தாக்கலை பிப்ரவரி மாதம் செய்து வருகிறது இந்திய அரசு. கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் தத்தளித்து வரும் நிலையில் பட்ஜெட்டை மக்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.

பட்ஜெட் தயாரிக்கும் முன்னர் வருடா வருடம் நடக்கும் ஒரு சம்பிரதாய நிகழ்ச்சிதான் அல்வா கிண்டுவது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் அல்வா கிண்டி பட்ஜெட் தயாரிக்கும் ஊழியர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

இந்த வருடம் கொரோனா பிரச்சினை காரணமாக புத்தகத்தில் நிதி நிலை அறிக்கைகள் எதுவும் புத்தகமாக இல்லாமல் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்திய பட்ஜெட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

பாருங்க:  வௌவால்களுக்கு கொரோனா இருப்பது உறுதி! அதிர்ச்சித் தகவல்!