தோனி இந்தியாவுக்கு விளையாட விரும்பமாட்டார்! சகவீரர் அதிர்ச்சித் தகவல்!

தோனி இந்தியாவுக்கு விளையாட விரும்பமாட்டார்! சகவீரர் அதிர்ச்சித் தகவல்!

கடந்த ஒரு வருடகாலமாக இந்திய அணிக்காக விளையாட தோனி மீண்டும் இந்திய அணியில் விளையாடுவாரா மாட்டாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

தோனி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியுசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார். அதன் பின்னர் எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை. ஐபிஎல் போட்டுகளில் சென்னை அணிக்காக விளையாடத் தயாரான போது கொரோனா காரணமாக ஐபிஎல் நடப்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.

இதனால் தோனியின் சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கபில்தேவ் மற்றும் ரவி சாஸ்த்ரி போன்றோரும் ஐபிஎல் தொடரில் தோனொ விளையாடுவதைப் பொறுத்தே இந்திய அணியில் அவர் இடம் தெரியவரும் எனக் கூறியிருந்தனர். ஆனால் சேவாக் மற்றும் ஹர்ஷா போக்ளே போன்றோர் தோனியின் சர்வதேசக் கனவு முடிந்துவிட்டதாக அறிவித்துளனர்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங்கிடம் ரசிகர் ஒருவர் தோனி எப்போது மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவார்? என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு ஹர்பஜன் சிங் தெரிவித்த தகவலோ ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர் ‘நீங்கள் இந்தியாவுக்கு தோனி ஆடுவாரா மாட்டாரா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள், எனக்குத் தெரிந்தவரை தோனி இனிமேல் இந்திய அணிக்கு விளையாட விரும்பமாட்டார். ’ எனக் கூறியுள்ளார். ஹர்பஜன் சிங் சமீபகாலமாக தோனி தலைமையேற்கும் சி எஸ் கே அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.