cinema news
தோனிக்கு பாராட்டு விழா-ஸ்டாலின் பங்கேற்கிற்கிறார்
சமீபத்தில் நடந்த ஐபிஎல் டிராபி தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தோனிக்கும் சி.எஸ்.கே வீரர்களுக்கும் பாராட்டு விழா நடக்கிறது.
சி.எஸ்.கே அணியின் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இதற்கான அழைப்பிதழை கொடுத்துள்ளார்.
வரும் 20ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலே பாராட்டு விழா நடக்கிறது. இந்த நிகழ்ச்சி கலைவாணர் அரங்கிலே நடக்க இருக்கிறது.