Published
11 months agoon
மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்த முன்னணி நடிகை ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் மலையாள நடிகர் திலீப்பால் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த பிரச்சினை பெரிய அளவில் பார்க்கப்பட்டது. இந்திய அளவில் பேசப்பட்டது.
இன்றும் மலையாள திரையுலகத்தினர் பாதி பேர் திலீப்புக்கு எதிராக உள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக இதில் நடிகர் திலீப், அவரது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் ஆகியோருக்கு எதிராக பல முக்கிய ஆவணங்கள் போலீசுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து நடிகை காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்தனர். ஆலுவாவில் உள்ள போலீஸ் கிளப்பில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அவருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.
ஆனால், தான் சென்னையில் இருப்பதால் 11ம் தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராவதாக முதலில் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து ஆலுவா போலீஸ் கிளப்பில் காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் போலீசார் செய்திருந்தனர். இந்த நிலையில் தன்னால் 11ம் தேதி விசாரணைக்கு ஆஜராக முடியாது என்றும், 13ம்தேதி ஆலுவாவில் உள்ள தனது வீட்டில் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி, போலீசுக்கு தகவல் அனுப்பினார்.
இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் காவ்யா மாதவனுக்கு குற்றப்பிரிவு போலீசார் நேற்று மீண்டும் ஒரு நோட்டீஸ் கொடுத்து உள்ளனர். அதில், வீட்டுக்கு வந்து விசாரணை நடத்த முடியாது என்றும், நாளை ஆலுவா போலீஸ் கிளப்பில் கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.