மயிலாடுதுறை மாவட்டத்தில் புகழ்பெற்ற தருமபுரம் ஆதினம் உள்ளது. இந்த ஆதினத்துக்கு சொந்தமாக 20க்கும் மேற்பட்ட கோவில்கள் இந்த பகுதிகளில் உள்ளது.
தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டத்தில் சில கோவில்கள் தருமபுர ஆதின கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆதினத்தில் வருடம் தோறும் நடக்கும் நிகழ்வுதான் சிஷ்யர்கள் பல்லக்கு தூக்கும் நிகழ்வு ஆகும்.
சிஷ்யர்கள் குருவான ஆதினத்தை ஒரு பல்லக்கில் தூக்கி வலம் வருவார்கள் இது ஆசிரம வளாகத்திலேயே நடைபெறும் நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி இந்த நிகழ்வுக்கு தடை விதித்து அரசு சார்பில் உத்தரவிட்டுள்ளார்.
இந்த தடை உத்தரவை ஹிந்து அமைப்பினர், மற்றும் பிஜேபி கட்சி, மடாதிபதிகள் பலர் எதிர்த்து வருகின்றனர்.. பாஜகவின் அண்ணாமலை கூறியதாவது நானே ஆதினத்தை தோளில் சுமப்பேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் வரும் மே22ல் இந்த நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில் இது குறித்து மேலும் கூறியுள்ள அண்ணாமலை
எட்டு வயது சம்பந்தரை எண்பது வயது நாவுக்கரசர் சுமந்தார். ‘பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்!’ தமிழ் பண்பாட்டை சுமப்போம். மே 22 தருமபுரத்தில் சந்திப்போம் என அண்ணாமலை கூறியுள்ளார்.