Entertainment
நானும் தருமபுர ஆதினத்தை சுமப்பேன் – அண்ணாமலை
கும்பகோணம் அருகே பழமையான தருமபுரம் உள்ளது. இங்கு தருமபுர ஆதின மடங்கள் உள்ளது. சைவ சமய மடமாகிய தருமபுர ஆதினத்தின் கீழ் 20க்கும் மேற்பட்ட முக்கிய கோவில்கள் கட்டுப்பாட்டில் உள்ளன.
தருமபுரி ஆதின மடத்தின் முக்கிய நிகழ்ச்சியாக ஆதினத்தை பல்லக்கில் தூக்கி சுமக்கும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி வருடம் தோறும் நடக்கும். சில வருடங்களாக இது நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.எனினும் இந்த வருடம் இந்த நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மதுரை ஆதினம் இது போல நிகழ்ச்சியை நடத்த தடை விதித்தது தவறு. பாரம்பரியமான இந்த நிகழ்ச்சியை தடை செய்தால் நானே பட்டினபிரவேசத்தில் கலந்து கொண்டு ஆதினத்தை தோளில் சுமப்பேன் என கூறினார்.
இதே போல் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையும் தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்! என கூறியுள்ளார்.
