Latest News
தனுஷ்கோடி நகரம் அழிந்து இன்றுடன் 57 ஆண்டுகள்
இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கைக்கு மிக நெருக்கமாக ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அமைந்திருந்தது. 1964ம் ஆண்டு இங்கு வீசிய கடும் புயலால் இந்த நகரமே அழிந்து போனது.
கடல் நீர் ஊருக்குள் புகுந்து பல இடங்களை அழித்தது சர்ச், ரயில்வே ஸ்டேசன் போன்றவை அழிந்து போனாலும் அதன் மிச்சங்களாய் நினைவு சின்னமாய் இன்று காட்சி அளிக்கின்றன.
புயலுக்கு முன் சென்னையில் இருந்து செல்லும் இண்டோ சிலோன் எக்ஸ்பிரஸ் தனுஷ்கோடி வரை செல்லும் அங்கிருந்து கப்பல் மூலம் அருகில் உள்ள இலங்கைக்கு செல்லும் வசதி இருந்து வந்தது.
அப்போது தனுஷ்கோடி நகரம் சிறிய துறைமுகமாக இருந்தது. இன்று அந்த நகரமே கடலுக்குள் சென்று விட்டது இன்று அந்த நகரம் இருந்திருந்தால் தூத்துக்குடியை விட பெரிய துறைமுகமாக இருந்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
புயலால் பல ஆயிரம் மக்கள் உயிர் உடைமைகளை இப்புயலில் இழந்தனர் இன்றோடு இந்த சோகசம்பவம் நடந்து 57 ஆண்டுகள் ஆகின்றன.
கடந்த 1964ம் ஆண்டு இதே நாளில் தனுஷ்கோடி நகரம் அழிந்தது.