1964ல் ஏற்பட்ட புயல் காரணமாக இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடி பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒரு ஊரையே கடல் விழுங்கியது.
இதனால் தனுஷ்கோடியில் எதுவுமே இல்லாமல் போனது. எல்லாம் கடலுக்குள் போனது. இடிந்து விழுந்த கட்டிடங்களின் சுவடுகள் மட்டும் நினைவு சின்னங்களாக போற்றப்படுகிறது.
இங்கு மக்களே செல்ல முடியாமல் சாலை வசதியற்று இருந்தது. சில வருடங்களுக்கு முன் இங்கு சாலை அமைக்கப்பட்டு திறந்து வைத்தது அரசு. தற்போது பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.
இதன் உச்சியில் நவீன ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புதிதாக தற்போது கலங்கரை விளக்கமும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிய பூங்காவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது . இந்த பூங்காவை மற்றும் கலங்கரை விளக்கத்தை நேற்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, எம்.எல்.ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.