பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு உத்தரவு அறிவிப்பை ஏற்று மக்கள் இன்று நாடு முழுவதும் வீட்டை விட்டு வெளியேறாமல் தங்களைத் தானே தங்கள் குடும்பத்துடன் தனிமைப்படுத்தி உள்ளனர்.
கொரொனாவை கட்டுபடுத்தும் விதமாக பிரதமரின் இந்த அறிவிப்பு அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளது. நம் தமிழகத்தைப் பொறுத்தவரை இவ்வாறான விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து என்னதான் அரசாங்கம் பல அறிவிப்புகளை வெளியிட்டாலும், நம் மக்கள் எப்பொழுது தங்களுக்கு பிடித்த பிரபலங்கள் கூறினால் மட்டுமே அவர்களுக்கு அந்த அறிவிப்புகள் பெருமளவில் சென்று அடையும்.
இந்த வகையில் நடிகர் தனுஷ் அவர்கள் பிரதமரின் ஊரடங்கு உத்தரவை (#jantacurfew) குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு கொரொனாவை பரவாமல் தடுக்க என்ன என்ன செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு கொண்ட கருத்துக்களை தனது உருக்கமான குரலில் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
#jantacurfew pic.twitter.com/aha5MAtHyF
— Dhanush (@dhanushkraja) March 21, 2020