அண்ணனுடன் சேர்வது குறித்து தனுஷ் டுவிட்

87

செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படம்தான் தனுசின் திரையுலக வாழ்க்கையை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தது. இதற்கு பின் தனுஷ்க்கு தொட்டது எல்லாமே துலங்கியது.

செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களிலும் தனுஷ் நடித்திருந்தார

இப்போது நீண்ட இடைவேளைக்கு பின் அண்ணன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

இந்தக் கூட்டணி குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“செல்வராகவன் + யுவன் + அரவிந்த் கிருஷ்ணா.. அட அட… சரியாக நான் தொடங்கிய இடம். என்னைச் செதுக்கிய, உருவாக்கிய, நான் இன்று இந்த நிலையில் இருக்க ஒரே காரணமான என் சகோதரர் செல்வராகவனுடன் மீண்டும் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. இந்த முறையாவது அவரை ஈர்ப்பேன் என்று நம்புகிறேன்”.

இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  எனது உலகம் திரும்புகிறேன் - செல்வராகவன்