தனுஷ் படங்களிலேயே பட்டாஸ்தான் நம்பர் 1 – தொலைக்காட்சியில் புதிய சாதனை!

தனுஷ் படங்களிலேயே பட்டாஸ்தான் நம்பர் 1 – தொலைக்காட்சியில் புதிய சாதனை!

தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட பட்டாஸ் திரைப்படம் தனுஷ் படங்களிலேயே அதிக பார்வையாளர்களைக் கொண்ட படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இயக்குனர் துரை செந்தில்குமாரும் தனுஷும் இரண்டாவது முறையாக இணைந்த படம் பட்டாஸ். அதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க, தனுஷுக்கு ஜோடியாக சினேகா, மெஹரீன் பிர்சாடா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். கடந்த பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் தோல்வி அடைந்தது.

ஆனால் இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட நிலையில் ஒரு சாதனையை செய்துள்ளது. அதில் 1,31,49,000 பேர் இந்த திரைப்படத்தை பார்த்துள்ளனர். இது தனுஷ் படங்களின் எண்ணிக்கையில் மிக அதிகமாகும். இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளது.