Connect with us

தனுஷ்தான் என் இன்ஸ்பிரேஷன் சொல்லும் ஹிந்தி நடிகை

Entertainment

தனுஷ்தான் என் இன்ஸ்பிரேஷன் சொல்லும் ஹிந்தி நடிகை

தனுஷ் தற்போது ஹிந்தி படம் ஒன்றில் நடித்துள்ளார்.

ராஞ்சனா, ஷமிதாப் ஆகிய 2 இந்தி படங்களில் தனுஷ் நடித்தார். இப்போது அத்ரங்கி ரே என்ற படத்தில் நடித்திருக்கிறார். ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் ராய், அத்ரங்கி ரே படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில்தான் வெளியானது இதில் தனுஷ் ஜோடியாக சாரா அலிகான் நடித்து வருகிறார். இவர், பாலிவுட் நடிகர் சைப் அலிகானின் மகள். அவர் கூறும்போது, ‘முதல் நாள் படப்பிடிப்பிலேயே தனுஷ் எனக்கு நண்பராகிவிட்டார்.

காட்சிக்கு ஏற்ப உங்களுடன் எப்படி வேண்டுமானாலும் அட்ஜஸ்ட் செய்து நடிக்கவும் நான் ரெடி. நிறைய டேக்  போனாலும் பரவாயில்லை என்று அவர் கூறியபோது, 2 முறை தேசிய விருது வாங்கிய நடிகர் இவ்வளவு கூலாக பேசுவது எனக்கு பிடித்திருந்தது.

தொடர்ந்து அவர் பல காட்சிகளில் எனக்கு ஹெல்ப் செய்தார். சின்ன சின்ன ரியாக்‌ஷன்களை எப்படி நடிக்க வேண்டும் என அவர் சொல்லிக் கொடுத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தமிழில் அவர் படமும் இயக்கியுள்ளார். மொத்தத்தில் எனக்கு இன்ஸ்பிரேஷனாக தனுஷைதான் சொல்வேன்’ என்று கூறி இருக்கிறார் இவர்

பாருங்க:  வரி செலுத்தியே ஆக வேண்டும்- தனுசுக்கு உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு

More in Entertainment

To Top