Entertainment
தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து- கடும் விமர்சனத்துக்கு உள்ளாகும் பயில்வான் ரங்கநாதன்
தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து முன்னேறியவர் பயில்வான் ரங்கநாதன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கையாளராக பணியாற்றி வரும் இவர், படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீப காலமாக பல சேனல்களில் இவர் பல நடிகர் நடிகையரின் அந்தரங்க விவகாரங்களை புட்டு புட்டு வைத்து வருகிறார்.
அந்த காலத்தில் யார் எந்த நடிகருடன் தொடர்பில் இருந்தார், எந்த நடிகையுடன் தொடர்பில் இருந்தார் என அடுக்கடுக்காக பல குறைகளை சொல்வார்.
நீண்ட நாட்களாக பலரும் இதை பார்த்து விட்டு பயில்வான் என்றால் இப்படித்தான் பேசுவார் என்று முடிவுக்கு வந்து விட்டனர்.
இரண்டு நாட்கள் முன்பு தனுஷ், ஐஸ்வர்யா பிரிந்த உடன் இன்னிக்கு பயில்வானுக்கு கொண்டாட்டம் தான் என்று பலர் கூறி இருந்தனர். அது போலவே அன்று மாலையே ஏன் தனுஷ், ஐஸ்வர்யா பிரிந்தனர் என வீடியோ பதிவிட்டிருந்தார்.
இதனால் பயில்வான் என்றாலே இப்படித்தான் என்ற கடுமையான முத்திரை விழுந்துள்ளது.
