Connect with us

Latest News

அக்கா இறந்ததால் விமான நிலையத்தில் கதறி அழுத தடகள வீராங்கனை

தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி என்பவர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்றிருந்தார். இவர் சென்றிருந்த சமயம் இவரது அக்கா திடீரென உயிரிழந்தார் இந்த தகவலை தனலட்சுமியிடம் குடும்பத்தார் தெரிவிக்கவில்லை. சொன்னால் போட்டியில் விளையாட முடியாமல் போய்விடும் என்று சொல்லாமல் மறைத்து விட்டனர்.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து நேற்று திருச்சி விமான நிலையம் திரும்பிய தனலட்சுமி தனது அக்கா வரவேற்க வரவில்லையே என கேட்டுள்ளார். அப்போது அவரது அக்கா உயிரிழந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர் விமான நிலையத்திலேயே கதறி அழுதார்.

பாருங்க:  ஸ்டாலின் ஓட்டிய மாட்டு வண்டி வைரலாகும் புகைப்படம்

Latest News

ஆனந்தம் விளையாடும் வீடு டீசர்

கெளதம் கார்த்திக், சேரன் நடிப்பில் ஆனந்தம் விளையாடும் வீடு படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் கெளதம் கார்த்திக்குக்கு ஜோடியாக சிவாத்மிகா நடித்துள்ளார்.

நந்தா பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பாருங்க:  MNM Candidates List 2019| மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
Continue Reading

Entertainment

பாடகர் எஸ்.பி.பியின் முதலாம் ஆண்டு நினைவு

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என தென்னக மொழிகள் இந்திய மொழிகள் அனைத்திலும் பாடி புகழ்பெற்றவர் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்.

ஆயிரம் நிலவே வா என்ற அடிமைப்பெண் பாடல் மூலம் அவர் அறிமுகமானாலும் அவர் இரண்டாவதாக பாடிய சாந்தி நிலையம் படப்பாடலான இயற்கை எனும் இளைய கன்னி என்ற பாடல்தான் முதலாவதாக ரிலீஸ் ஆனது.

அனைத்து மொழிகளிலும் 40000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்த பாடகர் எஸ்.பி.பி.

எம்.ஜி.ஆர், சிவாஜி ,ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, தற்போதைய தனுஷ் வரை மூன்று தலைமுறை நடிகர்களுக்கு பாடியவர் எஸ்.பி.பி.

இவர் மறைந்தபோது இவருக்கு 70வயதுக்கு மேல் ஆகி இருந்தாலும் சின்னப்பையனுக்கு பின்னணி பாடினால் கூட அந்த சின்னப்பையனின் குரல் போலவே இருப்பதாக நாம் எண்ணுவதுதான் இவரது வெற்றி. அந்த அளவு இவரது பாடல்கள் என்றும் இளமையாக இருக்கும்.

கடந்த வருடம் லேசான கொரோனா தொற்றினால் அவதிப்பட்டு வந்த எஸ்.பி.பி முகநூலில் வந்து நான் ஆஸ்பத்திரி செல்கிறேன் லேசாக உடம்பு சரியில்ல என்று போஸ்ட் போட்டுவிட்டுதான் சென்றார். ஆனால் நாள் ஆக ஆக இவரின் உடல்நிலை மோசமானது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 25 அன்று இயற்கை எய்தினார்.

அவரது குரலில் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்தே படத்தில் அவரது பாடல் வர உள்ளது அவரது ரசிகர்களுக்கு சற்று ஆறுதல்.

இன்று முதலாம் ஆண்டு நினைவு நாள் காணும் எஸ்.பி.பியை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் போற்றி வருகின்றனர். நாமும் அவரை நினைவு கூர்வோம்.

பாருங்க:  7 பெண்களை திருமணம் செய்த போலீ சப்-இன்ஸ்பெக்டர் கைது : சென்னையில் அதிர்ச்சி

Continue Reading

Latest News

ஏழுமலையானை தரிசிக்க இந்த மாதம் மட்டும் இவ்ளோ பேர் புக்கிங்கா

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் மிக புகழ்பெற்றது. அனுதினமும் விஐபிக்கள் தரிசிக்க வருவதும், பிரமாண்டமாக எந்நேரமும் இங்கு அன்னதானம் நடப்பதும், ஏழை பணக்காரர்கள் என்ற பேதமின்றி பல லட்சம் பக்தர்கள் தினமும் ஏழுமலையானை காண வரிசையில் முண்டியடிப்பதும் வழக்கமான நிகழ்வுதான்.

எல்லா கோவில்களும் நடை சாற்றப்பட்டாலும் திருப்பதியில் மட்டும் சிறிது நேரம் மட்டுமே நடை சாற்றப்படும். எந்த நேரமும் இங்குள்ள வெங்டாசலபதி பக்தர்களுக்கு பிஸியாக காட்சி கொடுத்து கொண்டே இருக்கிறார்.

புரட்டாசி மாதம் வரும் பிரம்மோற்சவம் இங்கு மிகவும் விசேஷமாக நடக்கும் ஒரு விழாவாகும். இந்த மாதத்தில் ஏழுமலையானை தரிசிக்க அதிக பக்தர்கள் விரும்புவர் அதனால் அக்டோபர் மாதம் விற்க வேண்டிய 2.40 லட்சம் முன்பதிவு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய 1 கோடி பேர் முயற்சி செய்திருக்கிறார்களாம் .

பாருங்க:  கண்ணாடி ரூமில் பாடிய எஸ்.பி.பி இப்போ கண்ணாடி பெட்டியிலா- கண்கலங்கிய கே.எஸ் ரவிக்குமார்
Continue Reading

Trending