தமிழக அரசின் சிறப்பு டிஜிபியாக பணியாற்றியவர் ராஜேஸ்தாஸ். சில மாதங்களுக்கு முன் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என ராஜேஸ்தாஸை குறிப்பிட்டு பேசினார். இப்போ ஆளும் அரசே நடவடிக்கை எடுக்கும் அளவு வந்து விட்டார்கள்.
டிஜிபி ராஜேஸ்தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து அவர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதை உதயநிதியும் தனது டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.
முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தின்போது சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் தவறாக நடந்து கொண்டார்’என பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரே புகார் அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய மூத்த காவல்துறை அதிகாரியால் அதேத்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிக்கே பாதுகாப்பில்லை என உதயநிதி கூறியுள்ளார்.