தமிழக டி.ஜிபிக்கு ஹெச்.ராஜாவின் கடுமையான வேண்டுகோள்

தமிழக டி.ஜிபிக்கு ஹெச்.ராஜாவின் கடுமையான வேண்டுகோள்

விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் வைத்து கொண்டாடுவதும் அதை நீர்நிலைகளில் கரைப்பதும் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. தற்போதைய திமுக அரசு கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சிலைகளை வைக்க தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் இது போன்ற தடைகளை மீறி சிலர் ஆங்காங்கே விநாயகர் சிலைகளை வைத்து வருகின்றனர்.

கரூரில் ஒரு சிலர் வைத்த விநாயகர் சிலைகளை அகற்ற போலீசார் அறிவுறுத்தியபோது ஏற்பட்ட மோதலில் போலீஸ் அதிகாரியால் விநாயகர் சிலை உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஹெச்.ராஜா உடனடியாக தமிழக டி.ஜி.பி தலையிட்டு இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த போலீஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.