கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவர்கள் சிலர் தவறாக நடந்து வருகின்றனர். சேலம் ஆத்தூரில் தலைமை ஆசிரியரை பள்ளி மாணவர் மிரட்டுவது, தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியரை மிரட்டுவது, திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பள்ளி மாணவர்கள் ராக்கிங் செய்வது விசிறி வீச சொல்வது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி ஆசிரியரை ஆபாச வார்த்தைகளால் பேசுவது என தொடர்ந்து இவர்களின் வீடியோக்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில் இதை பார்த்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, இவர்களை எச்சரிக்கும் விதமாகவும் அதே நேரத்தில் மிக அன்பாகவும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
மாணவர்கள் கற்று தரும் ஆசிரியர்களுக்கு மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், நானும் அரசுப்பள்ளியில் தான் படித்தேன், இது போல எல்லாம் தவறாக செய்யக்கூடாது மாணவர்களுக்கு அட்வைஸ் கூறினார் சைலேந்திரபாபு இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.