காப்பி அடித்தாலும் தேவா கொடுத்தது பில்டர் காஃபிதான்

காப்பி அடித்தாலும் தேவா கொடுத்தது பில்டர் காஃபிதான்

90களின் ஆரம்பத்தில் மனசுக்கேத்த மகராசா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தேவா படத்தின் பாடல்கள் நன்றாக வந்து இருந்தாலும்.இதற்கு அடுத்தாற்போல் வெளிவந்த வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலமே பிரகாசிக்க துவங்கினார்.இந்த படத்தில் எல்லா பாடல்களுமே பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.பொதுவாக தேவாவை பற்றி சொல்லும்போது அவர் காப்பியடிக்கிறார் என்றே பலரும் சொல்கின்றனர்.அவர் காப்பியடித்தாலும் எண்ணற்ற திகட்டாத மெட்டுக்களில் அமைந்த பாடல்களை நமக்கு கொடுத்திருக்கிறார்.உதாரணமாக புருஷ லட்சணத்தில் இடம்பெற்ற காக்கை சிறகினிலே நந்தலாலா நீ வந்ததாலா,செம்பட்டு பூவே ,காதல் சொல்ல வந்தேன் படத்தில் இடம்பெற்ற செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே பாடல் சாமுண்டி படத்தில் முத்து நகையே முழு நிலவே,விஷ்ணுவில் இடம்பெற்ற சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா, தமிழ்செல்வனில் ஆசை கேப்பக்களிக்காசை பாடல்,அண்ணாமலை படப்பாடல்கள்,சூரியனில் எஸ்.பி.பி பாடிய மன்னாதி மன்னன்கள் கதை கேட்டுப்பாரு பாடலாகட்டும் இன்னும் எத்தனையோ திகட்டாத பாடல்களை கொடுத்திருக்கிறார்.

.தேவா போன்ற இசையமைப்பாளர்கள் செய்தது என்னவென்றால் பல பாடல்களை காப்பியடித்தாலும் தமிழிசை சூழலுக்கு ஏற்ப மாற்றி அருமையான மெட்டில் கொடுத்தார்.

இப்போது இருக்கும் இசையமைப்பாளர்கள் செய்வது என்னவென்றால் ஆங்கில ஆல்பத்தை காப்பியடித்தாலும் அதை ரசிக்கும்படியாக கொடுப்பதில்லை பாடல்களை சின்னா பின்னமாக்கி கொடுக்கின்றனர்.

தமிழ்ப்பாடல்களை கெடுப்பது மட்டுமின்றி ஆங்கில பாடல்களையும் கெடுத்துவிடுகின்றனர்.

தேவா காப்பியடித்தாலும் கானா பாடினாலும் கேட்பவர்களை மெய்மறக்க செய்யும் தந்திரம் அவருக்கு இருந்தது என்பதே உண்மை.