Entertainment
டெங்கு பாதிப்பு இல்லை- சுகாதாரத்துறை செயலர்
வருடா வருடம் மழைக்காலம் ஆரம்பித்த உடன் இந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் தீபாவளியை ஒட்டி டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கும்.
இந்நிலையில் நேற்று கொடைக்கானல் வருகை புரிந்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அங்குள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தி விட்டு நிருபர்களை சந்திக்கையில் கூறியதாவது.
தமிழகத்தில் 5 கோடியே 32 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. மழைக் காலங்களில் டெங்கு நோயைக் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கொடைக்கானல் நகர் பகுதி, பண்ணைக்காடு பேரூராட்சி, பத்து கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக்கவசம் அணியாமல் வந்தால் அந்தந்த பகுதிகளில் உள்ள வியாபாரிகள் சுற்றுலாப் பயணிகளை முகக்கவசம் அணிவதற்கு வலியுறுத்த வேண்டும் என்றார்.
