cinema news
டிமாண்ட்டி காலனி 2 வருகிறதா?
தமிழ் சினிமாவில் குறைந்த வருடங்களாக நடித்து வந்தாலும் தேர்ந்தெடுத்து சிறந்த படங்களில் மட்டும் நடிப்பதையே வழக்கமாக வைத்துள்ளார் அருள் நிதி.
இவர் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த படம் டிமாண்ட்டி காலனி. இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார்.
படமும் நன்கு பேசப்பட்டது. த்ரில்லர் கதைகளில் இப்படம் சிறப்பான படமாக வந்தது.
அருள்நிதி டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிமுக இயக்குனர் வெங்கி அஜய் ஞானமுத்துவின் அசோசியேட் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் கதை திரைக்கதையை அஜய் ஞானமுத்து எழுதி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் டிமாண்டி காலனி முதல் பாகத்தை இயக்கியவர்.