cinema news
காலம் கடந்தும் மனதில் நிற்கும் தெய்வம் பட பாடல்கள்
இன்றைக்கு முருகன் கோவில்களில் காலை பூஜைக்கு முன் போடப்படும் முக்கியமான முருகன் சினிமாப்பாடல் இவர் பாடியதுதான். கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை என்று உச்சஸ்தாயியில் ஆரம்பித்து அப்படியே மருதமலை மாமணியே என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் இன்றளவும் புகழ்பெற்று விளங்குகிறது.
1972ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் வந்த ஓப்பனிங் பாடலான இந்த பாடல் 49 வருடங்களை கடந்தும் இந்த பாடல் இன்றும் கணீரென கம்பீரமாக இந்த பாடல் மக்கள் மனதில் நிற்கிறது என்றால் இப்பாடலை பாடிய மதுரை சோமு அவர்களுக்குத்தான் புகழ் அனைத்தும் சேரும்.
பாடலுக்கு இசையமைத்த குன்னக்குடி வைத்தியநாதன் அய்யா அவர்களுக்கும் இப்பாடலின் சிறப்பில் பங்குண்டு.
இது மட்டுமல்லாமல் வருவாண்டி தருவாண்டி என்ற சூலமங்களம் சகோதரிகளின் பாடல்கள், பெங்களூரு ஏ.ஆர் ரமணி அம்மாள் பாடிய குன்றத்திலே குமரனுக்கு, ராதா ஜெயலட்சுமி பாடிய திருச்செந்தூரில் போர்புரிந்து,, அய்யா பித்துக்குளி முருகதாஸ் பாடிய நாடறியும் நூறு மலை என இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து முருக பக்தி பாடல்களும் இன்றளவும் கேட்டு ரசித்து சுவைக்கும் பாடல்களாக உள்ளன.
அடுத்த வருடத்தில் 50வது வருடத்தை நெருங்கபோகும் இந்த பாடல்கள் காலம் கடந்தாலும் என்றும் மனதில் நிற்கும் பாடல்களாகும்.