இவர் நம்ம ஊர் நடிகை அல்ல தீபிகா சிங் என்ற குஜராத்தி நடிகை ஆவார். சமீபத்தில் டவ்தே குஜராத்தை கடந்தபோது கடுமையான சூறாவளி ஏற்பட்டு மரங்கள் எல்லாம் முறிந்து விழுந்தன. 12 உயிர்களை இப்புயல் பலி கொண்டது இதனால் மும்பை, கர்நாடகா, குஜராத் மாநிலங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின.
இந்நிலையில் ‘டவ்தே’ புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே நடனமாடியும், புகைப்படங்கள் எடுத்தும் இன்ஸ்டாகிராமில் நடிகை தீபிகா சிங் பதிவிட்டார். அவரது பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் கொந்தளித்தனர். ஏற்கனவே கொரோனா அச்சத்தில் மக்கள் இருக்கும் நிலையில், தற்போது புயலும் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த நேரத்தில் மக்களைப் பாதுகாப்பாக இருக்கச் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கும் நீங்களும் இதுபோன்ற செயலில் ஈடுபடலாமா? என தங்களின் ஆதங்கத்தைக் கொட்டி தீர்த்தனர். இதற்கிடையே புயலை நாம் தடுத்த நிறுத்த முடியாது. அதுவாகவே கடந்து போகும் எனச் சமூகவலைத்தளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு நடிகை தீபிகா சிங் பதிலளித்துள்ளார்.

