தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தவர் பீகாரை சேர்ந்த சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு நான்கு நாட்கள் முன்புதான அவரின் பெண் உதவியாளரும் இறந்து போனார்.
இவ்வழக்கில் அதிக மர்மம் உள்ளது ஹிந்தி சினிமாவின் பெருங்கூட்டம் ஏதோ சதி செய்கிறது, போதை மருந்து கும்பலுக்கும் இம்மரணத்திற்கும் சம்பந்தம் உள்ளது ஹிந்தி சினிமாவின் பெரும் தலைகள் இதில் பங்கேற்றுள்ளன என நடிகை கங்கனா ரணாவத் உட்பட சுஷாந்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் ஹிந்தி திரைப்பட முக்கிய நடிகர் நடிகைகள் போலீசாரால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் நடிகை தீபிகா படுகோனுக்கும் விசாரணையில் ஆஜராக சம்மன் அனுப்பபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.