தீபாவளி சரவெடியாய் அண்ணாத்தே

23

கடந்த 2020 ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் அண்ணாத்தே. ரஜினிகாந்த், நயன் தாரா, மீனா, குஷ்பு என அவரின் பழைய கதாநாயகிகள் பலரும் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

கொரொனா பிரச்சினைகளால் இப்பட ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போக கடந்த டிசம்பரில் ஹைதராபாத்தில் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் ரஜினிகாந்தின் அரசியல் குழப்பங்களும் சேர்ந்து கொள்ள, ஷூட்டிங் ஸ்பாட்டில் சிலருக்கு கொரோனா பாதிப்புகளும் ஏற்பட பட ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டது.

அந்த நேரத்தில் ரஜினியின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரலில்தான் மீண்டும் துவங்க இருப்பதாக தெரிகிறது.

இதனால் படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆழ்ந்த குழப்பத்தில் ஆழ்ந்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக சன் பிக்சர்ஸ் பட வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி வரும் 2021 நவம்பர் 4ம் தேதி தீபாவளி தினத்தன்று படம் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

பாருங்க:  எனக்கு கொரோனா உள்ளது… இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் டிவீட் – கடுப்பான ரசிகர்கள்!