தேமுதிக தலைவர் இரண்டு வருடங்கள் முன்பு தனது உடல்நலனுக்காக அமெரிக்காவில் போய் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதன் பின் அவர் அதிகம் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதில்லை கட்சி சார்ந்த கூட்டங்களை தவிர்த்து வருகிறார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட தேமுதிக கூட்டங்களில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை அவரது மனைவி பிரேமலதா தான் கட்சி சம்பந்தமான அனைத்து விசயங்களிலும் பங்கேற்றார்.
அடிக்கடி பேஸ்புக், டுவிட்டர் பதிவுகளில் மட்டும் விஜயகாந்த் பற்றிய அப்டேட் பதிவுகள் வரும் அந்த வகையில் விஜயகாந்த் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர்.