மதுரை மருத்துவக்கல்லூரியில் சில நாட்களுக்கு முன் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்ததாக செய்தி வெளியானது. இந்திய தேசிய மருத்துவ கழகம் வகுத்து கொடுத்த நெறிமுறையில் ஆங்கிலத்தில் இருந்ததை அப்படியே வாசித்ததாகவும் அது சமஸ்க்ருதம் என தெரியாது எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
எனினும் எப்படி சமஸ்க்ருதத்தில் உறுதிமொழி எடுக்கலாம் என மதுரை மருத்துவக்கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் மாணவர்கள் சங்கத்தலைவர் அளித்த பேட்டியில் டீனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்ற வகையில் பேட்டி கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில் மதுரை மருத்துவக்கல்லூரி டீனாக ரத்னவேலே நீடிப்பார் என அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று உத்தரவிட்டுள்ளார்.