சடலத்தை எடுத்து செல்ல அனுமதி மறுப்பு – கயிறு கட்டி கீழே இறக்கிய கொடூரம்

265

சாதியை காரணம் காட்டி சடலத்தை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அருகே உள்ள அசலந்தாபுரம் எனும் கிராமத்தில் பல குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால், அந்த கிராமத்தில் சுடுகாடு இல்லை. எனவே, அருகிலிருக்கும் ஊரில் உள்ள சுடுகாட்டிலேயே இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வருகின்றனர்.

இதில், சாதியை காட்டி உடலை எடுத்து செல்ல பக்கத்து ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அடிக்கடி நடந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை குப்பன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். எனவே, அவரது உடலை அடக்கம் செய்ய சுடுகாடு நோக்கி அவரின் உடலை எடுத்து சென்றனர். ஆனால், சாதியை காரணம் காட்டி அவரது உடலை அந்த ஊர் வழியாக எடுத்து செல்ல சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எவ்வளவு பேச்சுவார்த்தையும் நடத்தியும் அவர்கள் மனம் இறங்கி வரவில்லை.

எனவே, ஒரு பாலத்தின் வழியாக சடலைத்தை கயிறு கட்டி கீழே இறக்கி, சுடுகாட்டிற்கு எடுத்து சென்று எரியூட்டினர். இந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாருங்க:  புயல்- கேதர் ஜாதவ்- விவேக் மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன