நான் தோற்கவில்லை… நன்றி கூற வார்த்தை இல்லை… தர்ஷன் வெளியிட்ட வீடியோ

206
darshan

பிக்பாஸ் போட்டியில் வெற்றி பெற முடியாமல் போனதில் தனக்கு வருத்தமில்லை என தர்ஷன் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் திடீரென நேற்று வெளியேற்றப்பட்டார். இது நிகழ்ச்சியை பார்த்த்துக்கொண்டிருக்கும் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது பிக்பாஸின் தவறான முடிவு என சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், டிவிட்டர் பக்கத்தில் தர்ஷன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார். மேலும், வெற்றி பெற முடியாமல் போனதில் எனக்கு வருத்தமில்லை. எனக்கு குடும்பம் கிடைத்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவருக்கும் ரசிகர்கள் இருந்தனர். ஆனால், எனக்கு ரசிகர்கள் என்பதை தாண்டி குடும்பமாகவே இருக்கிறார்கள். இதிலேயே நான் வெற்றி பெற்றுவிட்டேன்’ என அந்த வீடியோவில் அவர் உருக்கமாக பேசியுள்ளார்.

பாருங்க:  வனிதாவுக்கு டப்பிங் பேசிய சாண்டி - பிக்பாஸ் கலக்கல் வீடியோ