பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் தர்ஷன்? – அதிர்ச்சி செய்தி

179
darshan

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தர்ஷன் வெளியேறவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

90 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே யார் வெற்றி பெறப்போகிறார் என்கிற எதிர்பார்ப்புஎழுந்துள்ளது. கவினுக்கு அதிகம் பேர் வாக்களித்ததால் அவரே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேற விரும்பினால் ஒருவர் வெளியேறலாம் என்கிற வாய்ப்பை பிக்பாஸ் கொடுக்க கவின் வெளியேறினார். இது அவரின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இந்த வாரம் எபப்டியும் ஒருவர் வெளியாக வேண்டும். கோல்டன் டிக்கெட்டை பெற்று முகேன் இறுதி போட்டியாளராக தேர்வாகி விட்டார். தற்போது எவிக்‌ஷன் நாமினேஷனில் சாண்டி, ஷெரின், தர்ஷன் ஆகிய மூவரும் உள்ளனர்.

இதில், இந்த வாரம் தர்ஷன் வெளியேறுகிறார் என நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து செய்திகள் கசிந்துள்ளது. இது அவரின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பாருங்க:  கொரோனாவில் இருந்து காப்பாற்றிய டாக்டர் வீரபாபு- ரஜினி சொன்ன அந்த வார்த்தைக்காக செய்த செயல்